Monday, January 17, 2011

ஆண்ட்ராய்டு தமிழ் விசைப்பலகை

ஆண்ட்ராய்டு இயங்குதளத்திற்கான தமிழ் விசைப் பலகை "தமிழ்விசை", ஆண்ட்ராய்டு சந்தையில் தமிழ்ப்புத்தாண்டு மற்றும் பொங்கல் நாள் (தை முதல் நாள்) அன்று தமிழா! குழுவினரால் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த விசைப்பலகையை ஆண்ட்ராய்டு 1.6 மற்றும் அதற்கு மேற்பட்ட இயங்குதளங்கள் உள்ள செல்பேசிகளில் பயன்படுத்த முடியும்.

ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் இன்னும் இயங்குதள அளவிலான தமிழ் ஆதரவு இல்லை. எனவே
தமிழ்விசை விசைப்பலகையுடன் ஒரு "preview view" வருகிறது. நீங்கள் தட்டச்சும் போது "preview view" வில் நீங்கள் தட்டச்சுவது தமிழில் தெரியும்.

ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் தமிழ் படிக்க தற்போதைக்கு ஓப்ரா மினி அல்லது செட்(sett) உலாவிகளைப் பயன்படுத்தலாம்.

தமிழ்விசையை ஆண்ட்ராய்டு சந்தையில் தரவிறக்க உங்கள் செல்பேசியில் ஆண்ட்ராய்டு சந்தைக்குச் சென்று "tamilvisai அல்லது tamil visai அல்லது tamil keyboard" எனத் தேடவும்.

இந்த மென்பொருள் திறவுமூல மென்பொருள். இதன் மூலத்தை
https://code.google.com/p/android-tamilkey/
இங்கிருந்து தரவிறக்கிக் கொள்ளலாம்.

வழுக்கள் அல்லது ஆலோசனைகள் இருந்தால் இங்கு தெரிவிக்கவும்
https://code.google.com/p/android-tamilkey/
அல்லது
http://www.thamizha.com/project/android-tamilkey

ஆலோசனைகள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன.

16 comments:

கோவி.கண்ணன் said...

நாள் ஒன்று கணக்கில் பதிவு போட்டாலும் நாங்களெல்லாம் தமிழுக்குச் செய்யாத சேவை.

பாராட்டுகள் ஜெகதீசன்

Unknown said...

கோவி.கண்ணன் சொல்வது நூறுசதம் உண்மை. இதை என் ஆன்ட்ராய்ட் மொபைல் மூலமாகப் பதிய முடிவதும் உங்களால்தான். நன்றிகள் நண்பரே..!

ramalingam said...

iphoneக்கு தமிழ் விசைப் பலகை இருந்தால் சொல்லவும்.

குழலி / Kuzhali said...

//iphoneக்கு தமிழ் விசைப் பலகை இருந்தால் சொல்லவும்.
//
செல்லினம்- sellinam என தேடலாம்

priyamudanprabu said...

பாராட்டுகள் ஜெகதீசன்

josebenedict said...

பாராட்டுகள் ஜெகதீசன்

Nokia 5800 க்கு தமிழ் விசைப் பலகை இருந்தால் சொல்லவும்.;)

T.Duraivel said...

twitterல் முதலிலேயே நன்றி கூறியிருக்கிறேன் என்றாலும் இங்கு இன்னொரு முறை நன்றி கூறுவதில் என்கடமையாககருதுகிறேன்.

குழலி / Kuzhali said...

ஜெகதீசன் இது ஒரு முக்கியமான பணி தமிழ் தொடர்பாக குறிப்பாக தமிழ்கணிமை தொடர்பாக அரசும் பல்கலைகழகங்களும் செய்ய வேண்டிய பணிகளை தனிநபர்களாக எ-கலப்பைமுகுந்தும், ஜெகதீசனும் மற்றும் பலரும் செய்கிறார்கள்... அனைவருக்கும் என் வாழ்த்துகள் மற்றும் தமிழா குழுவுக்கும் என் வாழ்த்துகள்

அறிவிலி said...

வாழ்த்துகள்

Anonymous said...

மிக்க மிக்க நன்றி.

ஆண்டிராய்டு போனை ரூட் செய்வதன் மூலம் தமிழை முழுமையாகப் படிக்கவும் முடியும் என்று சொல்கிறார்களே அதைப் பற்றி ஏதும் செய்திகள் உண்டா?

Astrologer sathishkumar Erode said...

நான் டவுன்லோடு செய்து இணைத்துவிட்டேன்.ஆனால் அதை இயக்கமுடியவில்லை..ஆங்கில கீபேட் தான் வருகிறது.எனது ஃபோன் சாம்சங் பாப்.உங்கள் ஆலோசனைகளை sathishastro77@gmail.com க்கு அனுப்பவும்

Astrologer sathishkumar Erode said...

இப்போது கண்டுபிடித்துவிட்டேன்.அட்டகாசமாக வேலை செய்கிறது.நன்றி

POIYAMOZHI.V said...

நான் சாம்சங் கேலக்ஸி பிட் 5670 பயன்படுத்துகிறேன் தமிழ் தட்டச்சு செய்ய தமிழ் விசை( தமிழா )பயன் படுத்துகிறேன் நன்றாக உள்ளது அந்த போனில் .யுனிகோட்.ஃபாண்ட் மதுரம் தான் இன்ஸ்டால் செய்ய முடிந்தது உள்ளது வேறு இலவச font கிடக்குமா
கு டு போன்ற எழுத்துக்கள் சரியாக வரவில்லை https://market.android.com/details?id=com.hongik.fontomizerSP&feature=search_result#?t=W251bGwsMSwxLDEsImNvbS5ob25naWsuZm9udG9taXplclNQIl0.இந்த font மட்டுமே மார்க்கெட்டில் உள்ளது தயவு செய்து உதவவும்

InternetOnlineJobHelp said...

Nice Info - follow my Classified Website


classiindia Top India Classified website, SEO . Post One Time & get Life time Traffic.

New Classified Website Launch in India - Tamil nadu

No Need Registration . One time post your Articles Get Life time
Traffic. i.e No expired your ads life long it will in our website.
Don't Miss the opportunity.
Visit Here -------> www.classiindia.in

rajendran said...

தமிழா விசைப்பலகை ஆண்ட்ராய்டு செயலிக்கு மிக உபயோகமாக இருக்கிறது. தமிழ்99ல் 'ங'எழுத்தில் ஞ என்று விசையில் உள்ளது. மாற்றி update செய்தால் தவறின்றி இருக்கும். தங்கள் உயரிய ப்ணிக்கு எவ்வளவு பாராட்டினாலும் தகும். வாழ்த்துக்கள். வளர்க.

பழ.ஆ.பழ.மு said...

வணக்கம் தங்கள் பணி மகத்தானது.
என்னால் SREE என்ற எழுத்தை எழுத முடியவில்லை.வழி கூறவும்.
email id seelakkali_15@yahoo.in