Thursday, January 3, 2008

குசும்பன் சொன்னது சரிதான் - கலைஞர் ஒப்புதல்

இப்பொழுதெல்லாம் அரசியல்வாதிகள் பதிவுகளைப் படிக்கிறார்களோ என சந்தேகம் வந்துள்ளது (சில மாதங்களுக்கு முன்கூட யாரோ இதைப் பற்றிப் பதிவு எழுதினார்கள்)...

கலைஞர் அவர்கள் நேற்று ஒரு கேள்வி-பதில் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
முழு செய்தி இங்கே:
என்னுடைய பகுத்தறிவுக்கு வைகோ சான்றிதழ் தேவையில்லை-கருணாநிதி

இதில் விஜயகாந்துக்கு சொல்லியிருக்கும் பதில்:
கேள்வி: கடந்த முப்பதாண்டில் ஒரு தடவையாவது ஏழை மக்களுக்காக சோறு
போட்டிருக்கிறோம் என்று நிருபிக்கத் தயாரா என்று விஜயகாந்த் சவால்
விடுகிறாரே?

பதில்: சபாஷ் இவரும் சவாலா. விசேஷ காலம் போல ஒரு தடவையல்ல, ஒவ்வொரு நாளும் ஏழை
மக்கள் சோறு சாப்பிட வேண்டும் என்பதற்காக பதவிப் பொறுப்பேற்ற முதல் நாளிலேயே
ரூ.2க்கு ஒரு கிலோ அரிசி விற்கப்படும் என்று முதல் ஆணை நான் பிறப்பித்தேன். அந்த
ஆணை பிறப்பித்த பிறகு உதாரணமாக தமிழ்நாட்டில் வேளாண்மை பணிகளுக்கு நாற்று நட மகளிர்
கிடைப்பதில்லை என்ற ஒரு குறை உள்ளது.

ஏன் தெரியுமா, ஒரு பெண் இரண்டு நாள் வேலை
செய்தால், அந்த மாதத்திற்கு தேவையான அரிசியை இவர் இரண்டு நாளில் தான் பெறுகின்ற
கூலியிலிருந்து வாங்கி விட முடிகிறது. அந்த இரண்டு நாள் மட்டும் வேலை செய்து விட்டு
பிறகு வேலைக்கே வர மறுக்கிறார்கள்
. பட்டினியாக அல்ல.


இது குசும்பனின் இடுகை:
தமிழகம் முன்மாதிரி மாநிலமாக மாறுகிறதா?
.......ஏன் இப்படி என்று அப்பாவிடம் கேட்டேன் அவர் சொன்னார் இங்கு மட்டும் என்று
இல்லை எங்கேயும் இதுபோல் ஆட்கள் பிரச்சினை இருக்கிறது அரிசி கிலோ இரண்டு ரூபாய்கு
கிடைக்கும் பொழுது யாரும் வேலை செய்து சாப்பிட தயாராக இல்லை, கல் அறுக்க போனால் ஒரு
நாளைக்கு 200 வரை கிடைக்கிறது ஒரு வாரம் போகிறார்கள் ஒரு மாதம் வீட்டில் இருந்து
சாப்பிடுகிறார்கள் என்றார்
பின் அறுவடை அப்பொழுதும் இது போல் ஆட்கள் பிரச்சினை
இருந்ததாகவும் நிறைய பணம் நஷ்டம் என்றார்........

கலைஞரின் கேள்வி-பதில் அறிக்கை குசும்பன் சொன்னதை அப்படியே ஆமோதிப்பது போல இருக்கிறது....

ஒருவேளை அரசியல்வாதிகளும் பதிவுகளைப் படிக்க ஆரம்பிச்சுட்டாங்களோ?? :)))