Friday, July 24, 2009

பதிவுலக விருது அங்கீகர ஆணையம்!

பிரபல தமிழ்ப் பத்திரிக்கைகளே பதிவர்களின் பதிவுகளை திருடி செய்தியாக வெளியிடுளியிடும் அளவுக்கு பதிவுலகம் அசுர வளர்ச்சியடைந்துள்ளது.சிறிது காலம் முன் வரை பதிவுலகை அவர்களின் கட்டுப்பாட்டில் வைத்திருந்த மூத்த பதிவர்கள், இப்போது அவர்களின் இருப்பைக் காத்துக்கொள்வதற்காக ஆளுக்கொரு விருது வழங்கி தங்களை பல்கலைகழகத்தின் துணை வேந்தர்போல காட்டிக்கொள்கிறார்கள்.

கரப்பான்பூச்சி விருது, மூட்டைப்பூச்சி விருது எனப் பெயரிட்டு இவர்களே விருதுகளை வழங்குகின்றனர். இந்தப் போக்கை இப்படியே விடுவது ஆரோக்கியமானதல்ல. எனவே விருது வழங்குதலைக் ஒழுங்குபடுத்த ஒரு அமைப்பு ஏற்படுத்த வேண்டியது இன்றியமையாததாகின்றது.

இதற்காக அமைக்கப்பட்டது தான் "பதிவுலக விருது அங்கீகர ஆணையம்". இனி இந்த ஆணையத்தின் அங்கீகரம் பெற்ற அமைப்புகள் / பதிவர்கள் மட்டுமே இனி விருதுகள் வழங்க வேண்டும்! அங்கீகரம் பெறாதவர்கள் விருதுகள் வழங்குவது சட்ட விரோதமானது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

இதில் பதிவர்களும் கொஞ்சம் பொறுப்புடன் நடந்துகொள்ளவேண்டும். விருது பெறும் முன் அந்த விருது ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்டவரால் தரப்படும் விருதா என்பதை உறுதி செய்துகொள்ளவேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம். அங்கீகரம் பெறாத விருதுகளைத் தங்கள் பதிவுகளில் இணைப்பதைத் தவிர்க்கவும்.


விரைவில்
1. தொடர் பதிவு அங்கீகர ஆணையம்
2. வலைப் போட்டிகள் அங்கீகர ஆணையம்
3. வலைத் திரட்டிகள் அங்கீகர ஆணையம்
எனப் பதிவுலகம் சார்ந்த அனைத்து செயல்களுக்கும் ஆணையங்கள் அமைக்கப்படும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம்!

இப்படிக்கு
பதிவுலக விருது அங்கீகர ஆணையம்

19 comments:

ஜெகதீசன் said...

நானே முதல்!

கோவி.கண்ணன் said...

//"பதிவுலக விருது அங்கீகர ஆணையம்!"//

இதனை அனுமதிக்க முடியாது -

- இப்படிக்கு

பதிவுலக விருது அங்கீகர ஆணையதிற்கான அங்கீகார ஆணையம் !

குழலி / Kuzhali said...

இம்மாதிரியான அங்கீகார ஆணையம் அமைக்க உமக்கென்ன பல்கலை கழகம் என்ற நினைப்பா அல்லது அரசாங்கம் என்ற நினைப்பா?

ஜெகதீசன் said...

//
குழலி / Kuzhali said...

இம்மாதிரியான அங்கீகார ஆணையம் அமைக்க உமக்கென்ன பல்கலை கழகம் என்ற நினைப்பா அல்லது அரசாங்கம் என்ற நினைப்பா?

//
என்னது..... ஆணையத்தையே எதிர்த்துக் கேள்வி கேக்குறீங்களா....
இனி 5 வருடங்களுக்கு நீங்கள் வழங்கும் எந்த விருதும் அங்கீகரிக்கப் படாது என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம்..
இப்படிக்கு
பதிவுலக விருது அங்கீகர ஆணையம்!

ஆ.ஞானசேகரன் said...

என்னமோ நடக்குது

ஜோசப் பால்ராஜ் said...

இந்த ஆணையத்துக்கு தலைவர் யாரு, குழு உறுப்பினர்கள் யாருன்னு தெரியாம இதை நாங்க ஏத்துக்க முடியாது.

SUREஷ்(பழனியிலிருந்து) said...

பிறப்புரிமை அப்படிங்கறது இதுதானோ..,

Raju said...

நல்லதொரு காமெடிப் பதிவு..
:)

நாமக்கல் சிபி said...

:))

வெற்றி-[க்]-கதிரவன் said...

//பதிவுலக விருது அங்கீகர ஆணையம்//

-:))))) nekku oru pathavi kondugo uncle -:)

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

ஆணையம் அமைக்க
ஆணையிட்டது யார்?

யார் அந்த பூசாரி?

எங்கள் வலையுலக கவிஞர் குல தங்கம் அன்புடன் கொடுத்த

கரப்பான் பூச்சி விருதை
களங்கம் செய்தது யார்?

:))))))))))))

ரவி said...

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

ரவி said...

இங்கே அவ்வ்வ்வ்வ்வ்வ் என்று சொல்லிய கரப்பான் பூச்சி எது ?

ரவி said...

கரப்பான் பூச்சி விருதை எனக்கு யாராவது கொடுத்தால் நன்று

நிஜமா நல்லவன் said...

:))))

நிஜமா நல்லவன் said...

/Comment moderation has been enabled. All comments must be approved by the blog author./


அண்ணே அப்படியே ''பின்னூட்ட மட்டுறுத்தல் அனுமதி ஆணையம் '' ஒன்னு ஆரம்பிங்க. அங்க அனுமதி வாங்காம யாரும் மட்டுறுத்தல் பண்ணினா ஒரு வழி பண்ணிடலாம்:)

நிஜமா நல்லவன் said...

/ஜெகதீசன் said...

நானே முதல்!/


''தனது பதிவில் தானே முதல் பின்னூட்டம் இடுவோர்களை தடை செய்யும் ஆணையம்'' - இதுவும் மிக அவசியம் ஆரம்பிக்கவும்:)

சி தயாளன் said...

காலத்துக்கேற்ற முடிவு. இந்த ஆணையம் மட்டுமே இனி விருதுகள் கொடுக்க வேண்டும். இந்த விருது விழா ஆண்டுக்கொரு முறை நடந்தால் போதுமானது..

சி தயாளன் said...

//ஜோசப் பால்ராஜ் said...
இந்த ஆணையத்துக்கு தலைவர் யாரு, குழு உறுப்பினர்கள் யாருன்னு தெரியாம இதை நாங்க ஏத்துக்க முடியாது.
//

தலைவர் யார் என்கிறது தானெ இப்ப எல்லா இடமும் பிரச்சினை...:-))