1) உருளைக்கிழங்கு -3
2) ப்ருக்கோலி - 168கி
3) தக்காளி -2
4)மாங்காய்
5) பெரிய வெங்காயம்(சின்னது) - 1
6)மிளகாய் - 3
7) கடுகு, உளுந்து, வெந்தயம், சீரகம்,கரிவேப்பிலை இன்ன பிற பொருட்கள்
8) வீட்டிலுள்ள எல்லா மசாலாக்களும் (அந்த ஓரத்தில் இருக்கும் பாபாஸ் மசாலா தவிர)
9)இஞ்சி-பூண்டு விழுது மற்றும் fridge ல இருக்கும் மற்ற எல்லா விழுதுகளும்
10)மேலே சொல்லாமல் விடுபட்ட இன்ன பிற பொருட்களும்
செய்முறை:
1)அலுவலகத்திலிருந்து சரியாக 6மணிக்கு வெளியேறி நேராக காமன்வெல்த் சென்-சியாங் பேரங்காடிக்குச் செல்லவும். அங்கு மாங்காய், உருளைக்கிழங்கு(baby potato - காய்கறிப் பகுதியில் 3 அல்லது 4வது வரிசையில் அல்லது வேறெங்காவது இருக்கும்..), தக்காளி வாங்கிக்கொள்ளவும்.
2)வீட்டுக்கு வந்து லுங்கிக்கு மாறிக்கொள்ளவும் (சமைப்பதற்கு ட்ரவுசரைவிட லுங்கி வசதியாக இருக்கும்)
3)உருளைக்கிழங்கு, தக்காளி, மாங்காய் ப்ருக்கோலி, மிளகாய், காய்கறி வெட்டும் தட்டு, கத்தி ஆகியவற்றை நன்கு கழுவிக்கொள்ளவும்.
4)மேலே குறிப்பிட்ட காய்கறிகளையும், வெங்காயத்தையும் நறுக்கவும்.
5) உருளைக்கிழங்கை தனியாக ஒரு 1/3 வேக்காடு வேகவைத்து எடுத்துவைத்துக்கொள்ளவும்.
6)வானலியில் சிறிது எண்ணை ஊற்றி காயவைக்கவும். எண்ணை காய்ந்ததும் கடுகு, உளுந்து இன்ன பிற பொருட்கள் போட்டு தாளித்து கரிவேப்பிலை போடவும்.
67வெட்டிவைத்துள்ள வெங்காயம், மிளகாய் ஆகியவற்றை நன்கு பொன்னிறமாக வரும் வரை வதக்கவும்.
7) 1/3வேக்காடு வெந்த உ.கிழங்கு, ப்ருக்கோலி, மாங்காய் ஆகியவற்றை சேர்த்து வதக்கவும்.
8) பாபா மசாலா தவிர்த்த எல்லா மசாலாக்களும் சேர்த்து உப்பு சேர்த்து வதக்கவும். மசாலா வாசம் அல்லது பச்சை வாசம் அல்லது வேறு எதாவது வாசம் போகும் வரை வதக்கவேண்டும்.
9)வெட்டிவைத்த தக்காளியை சேர்க்கவும்.(பொதுவாக தக்காளி 6வது பாயிண்ட் இருக்குமிடத்தில் சேர்ப்பார்கள். ஆனால் விஜய் டீவி சமயல் சமயல் நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற ஒருத்தர் இந்த இடத்தில் சேர்த்தால் நன்றாக இருக்கும் அப்படின்னு சொன்னார்....)
10) தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்கு கலகவும்.
11) கரண்டியில் கொஞ்சம் குழம்பு எடுத்து கையில் ஊற்றி உப்பு காரம் சரியாக இருக்கிறதா என நக்கி சரிபார்த்துக்கொள்ளவும்.
12)அடுப்பைக் குறைத்து வைத்து, வானலியை மூடி குழம்பு கொதிக்கும் வரை/காய்கறிகள் வேகும் வரை காத்திருக்கவும்
13) காய்கறி வெட்டும் தட்டு, வெட்டிய காய்கறிகளை வைத்திருந்த தட்டுகள், கத்தி, நேற்றிரவு ஜூஸ் குடித்த டம்ளர் ஆகியவற்றைக் கழுவிக் கவிழ்த்து வைக்கவும். இடையில் இரண்டு முறை கொஞ்சம் குழம்பைக் கையில் ஊற்றி நக்கிப் பார்த்து உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளவும்.
14) குழம்பு தயார். இறக்கும் போது கொஞ்சம் மல்லி இலை கிள்ளிப் போட்டு இறக்கவும்.
15) குழம்பை fridge இல் வைக்கத்தக்க பாத்திரத்திற்கு மாற்றி வைத்துவிட்டு வானலியைக் கழுவவும்.
16) fridgeஇல் இருந்து எடுத்த மசாலா, இஞ்சி பூண்டு விழுது, கறிவேப்பிலை, இன்ன பிறவற்றை மறக்காமல் திரும்ப வைக்கவும்.
பில்ஸ்பெர்ரி ரெடிமேட் ரொட்டியுடன் சேர்த்து சாப்பிட இந்தக் குழம்பு மிகவும் ஏற்றது.
(பில்ஸ்பெர்ரி ரெடிமேட் ரொட்டிசெய்வது குறித்த குறிப்பு இங்கே: http://jegadeesangurusamy.blogspot.com/2008/09/3.html
)
ப்ருக்கோலி-உருளைக்கிழங்கு சாம்பார்
மேலே குறிப்பிட்டுள்ள சமையல் குறிப்பில், காய்கறிகளை வேகவைக்கும் போது வேகவைத்த பாசிப்பருப்பு அல்லது துவரம்பருப்பு சேர்த்து வேகவைத்தால் அது சாம்பார்.
ப்ருக்கோலி-உருளைக்கிழங்கு குருமா
எந்தக் குழம்பு வைத்தாலும் குழம்பை இறக்குவதற்கு 5 நிமிடம் முன் அரை கப் தயிர் சேர்த்து வேகவைத்து இறக்கினால் அதற்குப் பெயர் குருமா என என் அறை நண்பர்(ஆந்திராக்காரர்) சொன்னார். அவரின் கூற்றுப்படி, மேலே குறிப்பிட்ட குழம்பை இறக்குவதற்கு 5.35 நிமிடங்களுக்கு முன் தயிர் சேர்த்து இறக்கினால் அது குருமா.
உரிமைத் துறப்பு:
1) இந்தக் செய்முறை வாசிக்க அல்லது வாசிக்காமலிருக்க மட்டுமே
2) இதை யாராவது செய்து சாப்பிட முயற்சித்தால் அது சொந்த செலவில் சூனியம் மட்டுமே
3) இதை சாப்பிட்டு எதாவது நேர்ந்தால் அதற்கு நானோ அல்லது கூகுளோ எந்த விதத்திலும் பொறுப்பல்ல. வேண்டுமெனில் ஏன் எழுதல... எதாவது எழுது என்று நச்சரித்தவர்கள் பொறுப்பேற்கலாம்.
நன்றி.. வேறொரு சமையல் குறிப்புடன் அடுத்த ஆண்டு மீண்டும் சந்திக்கிறேன்.
28 comments:
நல்ல பதிவு... நன்றி.
ஒரு தம்பி திருமணத்திற்கு தயாராகி இருப்பதை அறிந்து மகிழ்கிறேன்!
//நன்றி.. வேறொரு சமையல் குறிப்புடன் அடுத்த ஆண்டு மீண்டும் சந்திக்கிறேன்.//
I like this:))
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
The Most Eligible Singapore Indian Bachelor :)
Anputan
Singai Nathan
பாஸ்!!!
கலக்கிட்டீங்க பாஸ்!!!
உள்ளேன் ஐயா, அடுத்த முறை அதையே சமைச்சா கூப்பிடுங்கய்யா
/2)வீட்டுக்கு வந்து லுங்கிக்கு மாறிக்கொள்ளவும் (சமைப்பதற்கு ட்ரவுசரைவிட லுங்கி வசதியாக இருக்கும்)//
ஆமாம் கைத்துடச்சிக்க லுங்கி தான் வசதி
//
ஆமாம் கைத்துடச்சிக்க லுங்கி தான் வசதி
//
க.க.க.போ.... :)
இந்த ஆண்டு இதுவரை போட்ட ஒரே இடுகை, இதுலயும் கொடுமைய்யா கொடுமை. இதுக்கு நீ எழுதாமலேயே இருக்கலாம்.
:)
//உள்ளேன் ஐயா, அடுத்த முறை அதையே சமைச்சா கூப்பிடுங்கய்யா //
Still in the fridge.No worries :)
//
Still in the fridge.No worries :)
//
yessuu...
அப்படியே பில்ஸ்பெர்ரி சப்பாத்தியும் இருக்கு... கோவியண்ணே... நாளைக்கு வரீங்களா?
:)
அய்யகோ.... இந்த அநியாயத்தைத் தட்டிக்கேட்க யாருமே இல்லையா...
எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சனையைப் பற்றிப் பதிவெழுதீருக்கேன்... இதைக் கொடுமை அப்படின்னு சொல்றாரே இந்தப் பிரபலப் பதிவர்...
என்னிடம் லுங்கி இல்லாமையாலும் காமென்வெல்த் பேரங்காடி என் வீட்டிற்கு அருகில் இல்லாமையாலும் நான் இந்த சமையற் குறிப்பை உபயோகித்துப் பார்க்கும் கொடுமையில் இருந்து தப்பிவிட்டேன் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.
( ஜெக்கு கூட பதிவு போட்டுட்டாரு, நாமலும் ஒரு பதிவ போட்டே ஆகணுமே, அவுட் சோர்ஸ் பண்ணிடலாமா?)
//
நாமலும் ஒரு பதிவ போட்டே ஆகணுமே, அவுட் சோர்ஸ் பண்ணிடலாமா?
//
அந்தக் கொடுமை நடக்கப்போறப்ப சொல்லீருங்க... ஒரு வாரம் ஆன்லைன் வராம இருந்திடுறேன்...
:)
அன்பின் ஜெகதீசன்
நான் கோவிகூட வந்து சாப்பிட்டுப் பாக்கறேன்
நல்வாழ்த்துகள் ஜெகதீசன்
நட்புடன் சீனா
:-)))
2008 ரொட்டிக்கு 2010ல குருமவா?
அப்ப இத்தன நாளா லுங்கியும் குருமாவும் இல்லாமதான் சாப்டீங்களா?
ப்ருக்கோலி...ஆவியில அவிச்சு மட்டுமே சாப்பிடுகிறேன்.இது வித்தியாசமா இருக்கே!
அதென்ன அடுத்த வருஷம்.
அதுவரைக்கும் இந்தச் சாப்பாடுக்கான பிரச்சனை இருக்குமோ !
ஜோ & முகவை மைந்தன்..
வருகைக்கும் தங்களின் மேலான கருத்துக்களுக்கும் நன்றி.... இது போன்ற பாராட்டுக்கள் நான் மேலும் சிறப்பாக செயல்பட ஊக்குவிப்பாக இருக்கும்... உங்களுக்காகவேனும் தொடர்ந்து எழுத முயற்சிக்கிறேன்...
//
cheena (சீனா) said...
அன்பின் ஜெகதீசன்
நான் கோவிகூட வந்து சாப்பிட்டுப் பாக்கறேன்
நல்வாழ்த்துகள் ஜெகதீசன்
நட்புடன் சீனா
//
நெருப்பு சுடும்ன்னு சொல்லத்தான் முடியும்... அனுபவிச்சுத் தான் தெரிஞ்சுக்குவேன்னு சொல்றவங்களை வேற ஒன்னும் பண்ணமுடியாது...
நல்ல குருமா! நன்றி! இது அரசியல் அறிவியல் பதிவு என்பதால் இத்தோடு வடை பெறலாம்... ;-))
:-))!!!
ம்ம்ம்ம்... வாழ்த்துகள் ஜெகா...
நன்றி.. வேறொரு சமையல் குறிப்புடன் அடுத்த ஆண்டு மீண்டும் சந்திக்கிறேன்.
////////
HA HA
ஜெகதீசன் said...
நல்ல பதிவு... நன்றி.
///////////
////////
????????????????????
//14) குழம்பு தயார். இறக்கும் போது கொஞ்சம் மல்லி இலை கிள்ளிப் போட்டு இறக்கவும்//
சாகும் போது ஏன் மல்லி இலையைக் கிள்ளிப் போட்டுவிட்டு சாகவேண்டும்?
அப்பதான் சொர்க்கத்துக்கு நேர போவாங்களா?
//குழம்பை fridge இல் வைக்கத்தக்க பாத்திரத்திற்கு மாற்றி வைத்துவிட்டு வானலியைக் கழுவவும்.
16) fridgeஇல் இருந்து எடுத்த மசாலா, இஞ்சி பூண்டு விழுது, கறிவேப்பிலை, இன்ன பிறவற்றை மறக்காமல் திரும்ப வைக்கவும்.
//
Very important tip!! Liked it. :)
Post a Comment