
""சத்ரு சம்ஹார யாகம்' பலமா நடந்துண்டு இருக் கறது ஓய்... அதனால தான் சென்னைக்கு வர முடியலை...!'' என்று பேச்சை துவக்கினார் குப்பண்ணா.
""அது என்ன சத்ரு சம்சார யாகம்ன்னு சொல்லும் வே...'' என்று கேட்டார் பெரியசாமி அண்ணாச்சி.
""வம்பா போச்சு ஓய்... சத்ரு சம்சார யாகம் இல்லை... "சத்ரு சம்ஹார யாகம்'ன்னு சொன்னேன்... அதாவது எதிரிகளை அழிக்கற யாகம்... நடக்கறது எங்கே தெரியுமோ... ஊட்டி மலையில... இப்ப புரியறதா...'' என்றார் குப்பண்ணா.
""புரியுது... அந்த யாகம் நடத்தினா என்ன நடக்கும் வே...'' என்று கேட்டார் அண்ணாச்சி.
""போன ஜூன் மாசம் யாகம் நடந்தப்ப, அறிவாலயத் தலைவர் குடும்பத்துல பிரச்னை வந்து பெரும் பிளவு ஏற்பட்டது... சில நாளைக்கு முன்னால நடத்திய யாகத்தால சுப்ரீம் கோர்ட்ல கெட்ட பெயர் வந்தது... அதனால, சென்னைக்கு திரும்பறதா இருந்த புரோகிராமை "கேன்சல்' பண்ணிட்டு யாகத்தை திரும்ப "ஸ்டார்ட்' பண்ணச் சொல்லிட்டாங்க... யாகத்தை மேலும் தீவிரப்படுத்தி நடத்திண்டிருக்கா ஓய்...'' என்றார் குப்பண்ணா.
(தினமலர், அக்டோபர்-7-2007)
இதைப் பார்த்து சிரிப்பதா? கோவப்படுவதா? இல்லை இவர்களைப் பார்த்து வருத்தப் படுவதா?
நீங்களும் இங்க போயி படிச்சு சிரிங்க...
