Tuesday, February 3, 2009

ஆகா! ஓகோ!

லேபிள்கள் : கலைஞர், கருணாநிதி, தமிழினத் தலைவர், அரசியல், சிங்கள ரத்னா, செயல்படாதகுழு, வெக்கங்கெட்ட அரசியல், மானங்கெட்ட அரசியல், பதவி வெறி, இன்னும் பல அன்பார்லிமெண்ட்டரி சொற்கள்

பேரணிகள், கூட்டங்கள், மாநாடுகள் நடத்த திமுக முடிவு

திமுக ஆட்சியைக் கவிழ்க்க சதி

இலங்கை பிரச்சனையில் நேரடியாக தலையிடும் உரிமை மாநில அரசுக்கு இல்லை

திமுக செயற்குழு முடிவு:இலங்கை தமிழர் நல உரிமை பேரவை’ உதயம்

9 comments:

குசும்பன் said...

என்னங்க ராஜினாமா கிளைமேக்ஸ் இல்லாம முடிந்த இந்த நாடகம் எனக்கு பிடிக்கவில்லை!!

ஜெகதீசன் said...

இரண்டு வாரங்களுக்கு முன்பு வரை இப்படித் தான் நானும் வக்காலத்து வாங்கிக்கொண்டிருந்தேன்..
:((((


கொஞ்சம் சிந்தித்துப் பார்த்தால் கலைஞரால் இதைவிட அதிகம் ஒன்றும் செய்துவிடமுடியாது ....

காங்கிரசைக் கூட்டணியில் இருந்து வெளியேற்றலாம் & மத்திய அரசிலிருந்து வெளியேறலாம்...
காங்கிரசை நம்பி இருப்பதை விட பாமக வை கலைஞர் அதிகம் நம்பலாம் ஐந்து ஆண்டுகள் ஆட்சியில் நீடிக்க...

இப்போது மத்திய அரசிலிருந்து வெளியேறினால் கூட, இப்போது குறை கூறுவோர் அப்போதும் குறை கூறிக்கொண்டே தான் இருப்பர்... "வெறும் மூன்று மாதம் தானே இருக்கிறது... அதனால் தான் வெளியே வந்துவிட்டார்" என...

ஒருவேளை மத்திய அரசிடம் முறுக்கிக்கொண்டு ஆதரவை விலக்கினாலும் கூட ஆட்சி காபந்து ஆட்சியாக நீடிக்கும்.. அப்போது இப்போது தரும் அழுத்தங்களைக் கூட மத்திய அரசுக்கு திமுக வால் தரமுடியாது.... எனவே கூட்டணியில் இருந்துகொண்டே எதாவது முயற்சிக்கலாம் எனக் கலைஞர் நினைத்திருக்கலாம்..

ஜோசப் பால்ராஜ் said...

பரபரப்பான தீர்மானங்களை இயற்றி, ஈழத்தமிழர்களை காக்க நடவடிக்கை எடுத்த உலகத் தமிழர்களின் ஒப்பற்ற தலைவர் கலைஞர் வாழ்க.

ஜோசப் பால்ராஜ் said...

பரபரப்பான தீர்மானங்களை இயற்றி, ஈழத்தமிழர்களை காக்க நடவடிக்கை எடுத்த உலகத் தமிழர்களின் ஒப்பற்ற தலைவர் கலைஞர் வாழ்க.

Gowri Ananthan said...

மன்மோகன் சிங்க்குக்கே heart attack ஏற்படுத்திய விசயங்களை கூட நம்ம கலைஞர் இந்த தள்ளாத வயதிலும் கேட்டுக்கிட்டும் பார்த்துக்கிட்டும் அழுதுகிட்டும் (பூ எண்டு ஊதிக்கிட்டும்) தாங்கிட்டு இருக்காரே அதையாச்சும் பாராட்டுங்கோவன்...

சி தயாளன் said...

ஹய்யா......?

TBCD said...

உங்களைப் பார்த்தா எனக்கு சிப்பு சிப்பா வர்து..

வேற எதையாவது செய்வார் என்று எதிர்ப்பார்த்தீங்களா என்ன..

விட்டுப் போனது.....

ஈழத்தமிழர்களுக்கு என் இதயத்தில் (மட்டுமே) எப்போதும் இடமுண்டு.

அவர்களுக்காக நான் உயிரையும் இன்னும் (20 வருடம் கழித்து ) விடத்தயாராக உள்ளேன்.

பேரவைகள் தொடங்கும் போராட்டம் வெகுவிரைவில் (2020ல்) தொடங்கும்.
அதன் கிழஞரணி தலைவராக இசுடாலினும், பழங்கிழஞரணித் தலைவராக நானும் இருப்போம்.

-தொடரும்

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

தமிழினத் தலைவர் மருத்துவர் கலைஞர் வாழ்க!
அண்ணாவிடம் இரவலாக இதயம் பெற்ற ஒட்டுமொத்தத் தமிழினத்தின் ஒரே தலைவர் வாழ்க!
இதயக்கனியின் இதயம் கவர்ந்த ஒரே தலைவர் வாழ்க!
அண்ணாவிடமே பதினோரு லட்சம் "நிதி" கொடுத்த கருணை+ நிதி ஐயா வாழ்க!
இனமான பேராசிரியர் வாழ்க!
வளையாத நெஞ்சன் சாதிக் உயிரோடு இல்லை.
அதனால் அஞ்சா நெஞ்சன் வாழ்க!
வணங்காமுடி நாஞ்சிலாரும் உயிருடன் இல்லை.
அதனால் கருமுடி தளபதி வாழ்க!

இதுமாதிரி எழுதுரியளே உங்களுக்கெல்லாம் ஆட்டோ அனுப்புனாத்தான் சரிப்பட்டு வருவிய.

தலைப்பே சரியில்லை அது என்ன ஆகா ஓகோ?

"அய்யகோ" அப்படின்னுதானே இருக்கணும்?
பிராண்ட மாத்தாதீங்க சாமி!

priyamudanprabu said...

என்னமோ போங்க.........