Tuesday, October 16, 2007

காட்டுமிராண்டித்தனம். :(

தலித் வழக்கறிஞரின் வாயில் மலம் திணிப்பு-மதுரையில் கொடுமை

மதுரையில் தலித் சமூகத்தைச் சேர்ந்த வழக்கறிஞரின் வாயில் மலம் திணிக்கப்பட்ட கொடுமை நடந்துள்ளது. இந்த மகா பாதகச் செயலைச் செய்த பாமக செயலாளர் கட்சியை விட்டு நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

மதுரை சமயநல்லூரைச் சேர்ந்தவர் வழக்கறிஞர் சுரேஷ். இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த பஞ்சாயத்து தலைவர் கிள்ளிவளவனுக்கும் இடையே உள்ளாட்சி தேர்தலின்போது மோதல் ஏற்பட்டுள்ளது.

இந் நிலையில் சுரேஷ் தனியே சென்றபோது அவரை வழிமறித்த கிள்ளிவளவன் மற்றும் மதுரை பாமக மாவட்ட செயலாளர் கிட்டு ஆகியோர் கொண்ட கும்பல் அவரை அடித்து உதைத்துள்ளது. அத்தோடு விடாமல் அவரது வாயில் மலத்தையும் திணித்ததாக கூறப்படுகிறது.

இது குறித்து சுரேஷ் சமயநல்லூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின்பேரில் பஞ்சாயத்து தலைவர் கிள்ளிவளன் மற்றும் அவரது அடியாட்கள் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

ஆனால் பாமக மாவட்ட செயலாளர் கிட்டுவை போலீசார் கைது செய்யவில்லை. இந் நிலையில் பாமக தலைவர் ஜிகே மணி மதுரை வந்தார். சம்பவம் குறித்து விசாரணை நடத்திய அவர் பாமக செயலாளரை கட்சியை விட்டு நீக்கி உத்தரவிட்டார்.

:(
நன்றி: தட்ஸ்தமிழ்.

7 comments:

Anonymous said...

:(((

maruthamooran said...

என்ன கொடுமைங்க இது………….
இவ்வாறான காரியங்களை செய்பவர்களை யாரும் எதிர்க்கமாட்டார்கள். வெளியில் மாத்திரம் சமத்துக கொள்கைகளை பரப்புவார்களாம்???????? கொடுமையிலும் கொடுமை.

கோவி.கண்ணன் said...

தலித் வழக்கறிஞரின் வாயில் மலம் திணிப்பு-மதுரையில் கொடுமை//

இதுக்கு சரியான தண்டனையாக கிள்ளிவளவனுக்கும் அதையே திணிக்கனும்.

ஜெகதீசன் said...

நன்றி மருதமூரான்..
//
என்ன கொடுமைங்க இது………….
இவ்வாறான காரியங்களை செய்பவர்களை யாரும் எதிர்க்கமாட்டார்கள். வெளியில் மாத்திரம் சமத்துக கொள்கைகளை பரப்புவார்களாம்???????? கொடுமையிலும் கொடுமை.
//
நீங்கள் வேறு யாரையும் மனதில் வைத்து இந்த கருத்தை வெளியிடவில்லை என நம்புகிறேன். ஒருவேளை நீங்கள் அந்த "ஒருவரை" மனதில் வைத்து சொல்லியிருந்தால், அவரும் இதை எதிர்த்து இடுகை இட்டுள்ளார்...

ஜெகதீசன் said...

நன்றி கோவி.கண்ணன் அவர்களே...

jollupandi said...

தமிழ்செல்வனுக்கு இரங்கல் கவிதை - கலைஞர்

முன்னாள் நடிகை / முதல்வர்.. செல்வி செயலலிதா.. === ஆ ஐயோ அம்மா... ஆட்சி கவிழ்க்கனும்...


தமிழர் வாழும் இடமெல்லாம், தமிழ்செல்வன் புகழ் பாடுவோம்... வை கோ

இதுக்கு என்ன சொல்லப்போது உங்க அம்மா..

-/சுடலை மாடன்/- said...

இது போன்ற சாதிவெறிக் காட்டுமிராண்டித்தனத்துக்கு கடுமையான தண்டனைகள் கிடைக்குமாறு சட்டத்திருத்தம் செய்யப் படவேண்டும்.

அவரைக் கட்சியிலிருந்து வெளியேற்றியதோடு நின்று விடாமல், அவர் தண்டனையிலிருந்து தப்பி விடாமல் வழக்கை வெகுவிரைவில் முடித்து தீர்ப்பளிக்க பா.ம.க போராட்டம் செய்யவேண்டும்.

நன்றி - சொ. சங்கரபாண்டி