இதுவரை பார்த்தது இல்லை எனில் இங்கு பார்த்துக்கொள்ளுங்கள்........
எங்க வீட்டு குட்டி தேவதை இப்படித் தான் தூங்குவாங்க....


தீவிரமாக சிந்தித்துக் கொண்டிருக்கும் போது இப்படித்தான் இருப்பாங்க!!!!
முதலாளி: என் மேசை மேல பாத்தியா ஒரு மாத தூசி படிஞ்சிருக்கும் போலத் தெரியுது?*************
முனியப்பர்: அது என் தப்பு இல்ல எஜமான். நான் வேலைக்குச் சேந்தே ஒரு வாரம் தான் ஆகுது
முதலாளி: தோட்டத்துச் செடிகளுக்கு எல்லாம் தண்ணி ஊத்தியாச்சா?
முனியப்பர்: ஐயா! நல்ல மழை பெஞ்சுக்கிட்டு இருக்கு.
முதலாளி: அதனால என்ன குடை பிடிச்சுக்கிட்டு ஊத்து!
கடைக்காரரே, ஒரு பத்து கிலோ வெங்காயம், சின்னச் சின்ன வெங்காயமாப் போடுங்க. பெருசா இருந்தா ரெம்ப கனமா இருக்கும். தூக்க முடியாது!!!!!!*****************************
முதலாளி: என்னடா டின்ல எண்ணை குறையுது?*****************************
முனியப்பர்: டின் அடியில சின்ன ஓட்டை இருந்துருக்கு, கவனிக்காம விட்டுட்டேன்..
முதலாளி: டேய்.. டின் மேல தான எண்ணை குறையுது. அடியில் ஓட்டைன்னு கதை விட்டு ஏமாற்றவா பாக்குற?
முதலாளி: நைட் வாட்ச்மேன் வேலை கேக்குறயே.. உனக்கு அனுபவம் இருக்கா?
முனியப்பர்: என்ன இப்படிக் கேட்டுட்டீங்க. நைட் தூங்குறப்ப சின்னச் சத்தம் கேட்டாலும் எந்திரிச்சுருவேன்!!!
**தினமும் மூன்று மணி நேரம் மட்டுமே கல்வி.
**மீதி நேரம் அப்பா/குடும்பத்தினர்
செய்யும் தொழிலை கற்றுக் கொள்ளலாம், இல்லையேல் கட்டாயமில்லை, வேறு தொழிலும் பழகலாம்.
**வாரத்தில் இரண்டு வகுப்புகள்(பீரியட்) மட்டுமே இந்த வகுப்புகள் இருக்கும்.
**இதற்கான பயிற்சி பள்ளியில் வழங்கப் படும்.
(நான் படித்த போது எங்கள்பள்ளியில் [6 முதல் 10வரை படித்த அரசு உயர்நிலைப்பள்ளியில்] விவசாய வகுப்புகளும், நீதிபோதனை வகுப்புகளும் இருந்தது. என் தம்பி படித்த நடுநிலைப் பள்ளியில் தச்சுக்கலை(க்ராப்ட்) மற்றும் நெசவு வகுப்புகள் இருந்தன. நான் 10வகுப்பு முடித்தது 1996ம் வருடம்)
ஒரு நாளில் 3 மணி நேரம் மட்டுமே பள்ளி நடக்கும்.மீதமுள்ள நேரத்தில் தன் குடும்பத்தொழில்/ வேறு தொழில்கள் செய்துகொள்ளலாம்.
இதற்க்குப் பள்ளிகளில் எந்த வகுப்புகளும் கிடையாது. மதிப்பெண் எதுவும் கிடையாது.
**சில நூற்றாண்டுகளாகப் படிப்புரிமை மறுக்கப்பட்ட பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப் பட்ட வகுப்பினரில் 70%க்கும் மேற்பட்டோர் முதல் தலைமுறையாகப் பள்ளிக்குச் செல்லத் தொடங்கியிருந்தனர்.
**முற்படுத்தப்பட்ட வகுப்பினரில் 70%க்கும் மேற்பட்டோர் பல தலைமுறைகள் கல்வி கற்று நல்ல வேலைகளில் இருந்தனர்.(அரசுப் பணிகளில்
70%க்கும் மேல் இருந்தனர்.)
**முதல் தலைமுறையாகக் கல்வி கற்கும், பெற்றோர் குலத்தொழில் புரியும் 70% மாணவர்கள், தங்கள் தந்தை செய்யும் தொழில் மட்டுமே கற்றிருக்க முடியும். கல்வியறிவற்ற தந்தைகள் அவர்களுக்கு வேறு எந்தப் பயிற்சியும் அளிக்க முடியாது. வீட்டில் பெற்றோர் எதுவும் சொல்லித்தர முடியாத நிலையில் 3 மணி நேரக் கல்வியால் அவர்கள் என்ன கற்றுக் கொண்டிருக்க முடியும்?
**முந்தய தலைமுறைகளில் இருந்து நல்ல கல்வியறிவு பெற்ற, உயர் வகுப்பினர், தன் பிள்ளைகளுக்குத் தேவையான பயிற்சிகள் தந்திருப்பர். "வெள்ளைக் காலர் பணி"களுக்குத் தேவையான அனைத்துப் பயிற்சிகளும் இவர்களுக்கு அளிக்கப் பட்டிருக்கும். இவர்களுக்கு, அந்த 3 மணி நேரக் கல்வி தவிர பல பயிற்சிகள் இவர்கள் பெற்றோர்களிடமிருந்து கிடைத்திருக்கும்.
இவ்வாறு இருக்கும்போது எப்படி முதல் தலைமுறையாகக் கல்வி கற்றவர்கள் பலதலைமுறையாக நல்லநிலையில் இருப்பவர்களிடம் போட்டியிட்டு வேலைகள் பெற்றிருக்கமுடியும்? இத்திட்டம் செயல்பட்டிருந்தால் அரசுப்பணிகள், மருத்துவம், பொறியியல் மற்றும் அனைத்துத் துறைகளிலும் முற்படுத்தப் பட்ட மக்களின் ஆதிக்கம் இன்னும் இருந்து கொண்டுதானே இருக்கும்? விவசாயி மகன் விவசாயியாகவும், துணி துவைப்பவர் மகன் துணி
துவைப்பவருமாகத் தானே இருந்திருக்க முடியும்? இத்திட்டத்தை பெரியார், காமராசர் முதல் சாதாரண மக்கள் வரை
எதிர்த்ததில் என்ன தவறு இருக்கிறது?
ராஜாஜிக்குப் பின்வந்த கர்மவீரர் காமராசரால் எப்படி
மூடப்பட்ட 6000 பள்ளிகளையும் திறந்து அதற்கு மேலும் புதிய பள்ளிகள் திறக்க முடிந்தது?
(என் அம்மா, அப்பா 10ஆம் வகுப்பு வரை படித்ததும், அவர்கள் எங்களைப் பட்டப்படிப்புகள் வரை படிக்கவைத்ததும் காமராசரால் தான். இது எனக்கு மட்டுமில்லை, என் தலைமுறையில் இருக்கும் பெரும்பாண்மையோருக்கும் இது பொருந்தும்)
காமராசரால் மதிய உணவுத்திட்டத்தின் மூலம் அனைத்து மாணவர்களையும் முழுநேரமும் பள்ளிக்குக் கொண்டு வரமுடிந்ததே?
இந்த வரிகளை, ஜீவி அவர்கள் பெரிதும் மதிப்பதாகக் கூறும் பெரியார் மீதும், காமராசர் மீதும்,
குலக்கல்வித் திட்டத்தை எதிர்த்த மற்ற தலைவர்களின் மீதும் பரப்பப்படும் அவதூறாகவே கருதமுடிகிறது.
இதற்கு என் அடுத்த பதிவில் பதில் தருகிறேன்.